என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி தற்கொலை"
- ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம் சோப்தண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மெடிப்பள்ளி சத்தியம். இவரது மனைவி ரூபா தேவி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மெடிப்பள்ளி சத்தியம் ஐதராபாத் அடுத்த அல்வால் பஞ்சசீலா காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரூபா தேவி விகாரபாத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மெடிப்பள்ளி சத்தியம் எம்.எல்.ஏ. தனது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மற்றும் பல்வேறு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தனர்.
இந்த நிலையில் ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நேற்று காலை தொகுதிக்குச் சென்ற எம்.எல்.ஏ. சத்தியம் மாலை வரை தொகுதியிலேயே இருந்தார்.
நேற்று நள்ளிரவு எம்.எல்.ஏ. சத்யம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரூபா தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட சத்தியம் எம்.எல்.ஏ. மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரூபா தேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
- சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.
முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி செல்வி (வயது 45). வீராசாமி அடிக்கடி குடிபோதையில் வீட்டில் வந்து தகராறு செய்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி செல்வி தனது வீட்டில் பேன் கொக்கியில் புடவையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை கண்ட பிரகாஷ், செல்வியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக பிரகாஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார்.
- சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பச்சியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சின்னவள் (வயது50).
இந்த நிலையில் செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். சின்னவள் ஏரி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
ஆனாலும் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
- போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், வனஸ்தலிபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது 31). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி சாஹிதி (29). கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோஜ் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி சாஹிதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மனோஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் மனோஜை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்த செய்தியை அவரது மனைவிக்கு தெரிவித்தனர்.
இதனை கேட்ட சாஹிதி கதறி துடித்தார். இதையடுத்து மனோஜின் உடல் கடந்த 23-ந் தேதி அமெரிக்காவிலிருந்து வனஸ்தலிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனைக் கண்ட அவரது பெற்றோர் சாஹிதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.
- பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது30). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவானி(24). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பிரசாந்த்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். மேலும் அந்த பெண்ணுடன் பிரசாந்த் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பவானி கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் மனவேதனை அடைந்த பவானி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார். மேலும் 3 மாதமாக அவர் வீட்டுக்கும் வரவில்லை என்று தெரிகிறது. இந்த மனவேதனையில் பவானி தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
- மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பகலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மலாத்தீவில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரதீபா (வயது35). அய்யப்பன் வெளிநாட்டில் வேலை செய்வதால் குடும்ப செலவிற்காக மாதந்தோறும் பணம் அனுப்பி வைப்பார். இந்த நிலையில் அய்யப்பன் கடந்த மாதம் குடும்ப செலவிற்காக பணம் அனுப்பாமல் இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர்.
- மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
போரூர்:
கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வருபவர் பங்கஜ்குமார். இவர் எஸ்.பி.ஐ வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சரி (வயது46) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர், பீகார் மாநிலம் பாட்னா ஆகும்.
நேற்று இரவு பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பங்கஜ் குமார் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மனைவி மஞ்சரி மாயமாகி இருந்தார். அவரை பங்கஜ்குமார் தேடிவந்தார்.
இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பின் கீழே மஞ்சரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு குடியிருப்பின் காவலாளி ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பங்கஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து பார்த்தபோது மனைவி மஞ்சரி பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மஞ்சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சரி, வீட்டின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 10-வது மாடியில் இருந்து விழுந்து இறந்து உள்ளார்.
இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மஞ்சரியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து அவரது கணவர் பங்கஜ்குமாரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் பங்கஜ்குமார் பாட்னாவில் இருந்து பணியிடம் மாறுதல் பெற்று சென்னைக்கு குடி வந்து உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
- வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- கணவர் நினைவாகவே இருந்த நிலையில் மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாதகோனார்சந்து பகுதியை சேர்ந்த மருதராஜ் மனைவி ராணி(45). மருதராஜ் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று 30-ம் நாள் முடிந்து வீட்டில் மருதராஜூக்கு ராணி மற்றும் குடும்பத்தினர் சாமி கும்பிட்டனர். இன்று தனது கணவர் நினைவாகவே இருந்த நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை போடி ரோட்டை சேர்ந்தவர் சோலைத்தேவர். இவரது மனைவி முத்துமாயக்காள் (வயது80). கடந்த மாதம் சோலைத்தேவர் இறந்து விட்டார்.
இதனால் முத்து மாயக்காள் மனவேதனையில் இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று விஷம் குடித்து விட்டார். உடனே அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இருவரும் நேரு வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர்.
இளையராஜாவும், சவுமியாவும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புது தென்றல் வீதியில் வசித்து வந்தனர்.
இளையராஜா லோடு லாரி வாங்கி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், மனவேதனை அடைந்த சவுமியா இரவு இளையராஜா தூங்கிய பின்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சவுமியாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் சவுமியாவின் தாய் சுமதி ஆரோவில் போலீசில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். அதில், இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், எனவே, அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்தும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இதை சந்தேகத்துக்கிடமான மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்